Monday 15 December 2014

பொறியியல் பட்டதாரிகளுக்கு டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி

அரியானா மாநிலம் குர்கானில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உயிரிதொழில்நுட்ப நிறுவனமான டிரான்ஸ்லேஷனல் ஹெல்த் சயின்ஸ் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் காலியாக உள்ள சீனியர் டெக்னிக்கல் ஆபீசர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: சீனியர் டெக்னிக்கல் ஆபீசர்: (நெட்வொர்க் சிஸ்டம்)
தகுதி: பி.இ, பி.டெக், எம்சிஏ பட்டம் பெற்று நெட்வொர்க்கிங், ஹார்ட்வேர் துறையில் 7 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 17.12.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
பணி: மேனேஜ்மென்ட் அசிஸ்டென்ட்ஸ் (நிதி மற்றும் அக்கவுன்ட்ஸ்)
தகுதி: பி.காம் நிதி மேலாண்மை துறையில் டிப்ளமோ அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ முடித்திருப்பது விரும்பத்தக்கது.
வயது வரம்பு: 17.12.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
பணி: இன்டெர்ன்ஸ்/ஜூனியர் அனலிசிஸ்ட்
தகுதி: பொருளியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் நலவாழ்வு பொருளியியல் பிரிவில் 2 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 17.12.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: நிர்வாக உதவியாளர்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மத்திய அல்லது மாநில அரசுத்துறைகளில் 2 வருட அன்பவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது: 17.12.2014 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
பணி: கிளரிக்கல் அசிஸ்டென்ட்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மனிதவளத் துறைகளில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட்
தகுதி: பி.காம் முடித்து அக்கவுன்ட்சில் பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் கோர்ஸ் மற்றும் டேலி தெரிந்திருக்க வேண்டும்
பணி: பிரன்ட் ஆபீஸ் எக்சிக்யூடிவ்
தகுதி: ஆங்கி பாடத்துடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மற்றும் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ் கோர்ஸ் மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் ஒரு வருட  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஒட்டுநர்
தகுதி: மெட்ரிகுலேசனுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, மாதிரி விண்ணப்பம் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய http://thsti.res.in/ என்ற இணையதளத்தை பார்க்கவும்
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
TRANSLATIONAL HEALTH SCIENCE AND TECHNOLOGY INSTITUTE,
496, Udyog Vihar,
Phase-III, GURGAON-122016,
Haryana.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2014

No comments:

Post a Comment