Friday 12 December 2014

பொகாரோ இரும்பு ஆலையில் ஆப்ரேட்டர் பணி

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்திய ஸ்டீல் ஆணையத்தின் பொகாரோ ஸ்டீல் ஆலையில் காலியாக ஆப்ரேட்டர் பணியிடங்களை நிரப்ப  தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: BSL/R/2014-02
பணி: Operator Cum Technician Trainee, S-3
காலியிடங்கள்: 110
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
மெட்டலர்ஜி - 50, மெக்கானிக்கல் - 20, எலக்ட்ரிக்கல் - 20, சிவில் - 05, கெமிக்கல்-10, செராமிக்ஸ்-05
வயதுவரம்பு: 01.11.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் 3 வருட டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.10,700, இரண்டாம் வருடம் ரூ.12,200-ம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.  வெற்றிகரமாக இரண்டு வருட பயிற்சியை முடித்தவர்களுக்கு S-3 Grade-ல் பணியமர்த்தப்படுவார்கள். மாதம் ரூ.16,800 - 24,110 என்ற விகிதத்தில் சம்பளமும் இதர சலுகைகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.250. துறைசார்ந்த ஊழியர்ககளுக்கு ரூ.50. எஸ்சி,எஸ்டி மற்றும் மாற்றித்திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் Career with sail என்ற லிங்கில் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2014
மேலும் உடற்தகுதிகள், தேர்வு குறித்த தகவல்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

No comments:

Post a Comment