Sunday 3 August 2014

மத்திய உள்துறை போலீஸ் பிரிவில் டெக்னீசியன் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் போலீஸ் வயர்லெஸ் ஒருங்கிணைப்பு இயக்ககத்தில் காலியாக 185 டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப மத்திய, மாநில காவல் துறைகளில் அனுபவம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ரேடியோ டெக்னீசியன் - 43சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம அந்தஸ்து உடைய பதவி வகித்திருக்க வேண்டும் அல்லது ரேடியோ டெக்னீசியன் துறையில் ஏஎஸ்ஐயாக 3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: வயர்லெஸ் ஆபரேட்டர் - 85சம்பளம்: மாதம் ரூ. ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம அந்தஸ்து உடைய பதவி வகித்திருக்க வேண்டும் அல்லது அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் 2 வருடம் வயர்லெஸ் ஆபரேட்டராக பணியாற்றியிருக்க வேண்டும்.
பணி: சைபர் ஆபரேட்டர் - 17சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசின் போலீஸ் டெலிகம்யூனிகேசன் துறையில் சம அந்தஸ்துடைய பதவி வகித்திருப்பதுடன் ஹெட் கான்ஸ்டபிள்  அந்தஸ்தில் 8 வருடம் வயர்லெஸ் ஆபரேட்டராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: டெஸ்பேட்ச் ரைடர் - 40சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
தகுதி: மத்திய அல்லது மாநில அரசு காவல்துறையில் பணியாற்றியவர்கள். சம்பந்தப்பட்ட துறையில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Assistant Director (Admn),
Ministry of Home affairs,
Directorate of Coordination (Police
Wireless),
Block No:9, CGO Complex,
Lodhi Road,
NEWDELHI 110003.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.08.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.dcpw.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment