Saturday 9 August 2014

பட்டதாரி பெண்களுக்கு இந்திய விமானப்படையில் பயிற்சியுடன் பணி

இந்திய விமானப்படையின் Flying,Technical மற்றும் Ground Duty பிரிவுகளில் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்கான AFCAT 02/2014க்கான தேர்வு எழுத தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூலை 2015ல் பயிற்சி கோர்ஸ் ஆரம்பமாக உள்ளது. 
பயிற்சி 1. Flying Branch: 198/15F/SSC/W
வயது வரம்பு: 01.07.2015 தேதியின்படி 19 - 23க்குள் இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் உரிமம் பெற்றவர்களாக இருப்பின் உச்ச வயது வரம்பில் 25க்குள்ளும். அதாவது திருமணம் ஆகாதவர்களாக இருக்க வேண்டும். 02.07.1990 - 01.07.1996க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். +2வில் இயற்பியல், கணிதம் பாடங்களை படித்தவராக இருக்க வேண்டும் அல்லது 60 சதவிகித மதிப்பெண்களுடன் 4 வருட பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடற்தகுதிகள்: உயரம் - 162.5 செ.மீ., கால் நீளம்: 99 - 120 செ.மீ., கண் பார்வை திறன்: கண்ணாடி அணியாமல் 6/6, 6/9. அளவிலும் கண் நோய்கள் ஏதுமின்றி இருக்க வேண்டும். ஏற்கனவே பைலட் அப்டிடியூட் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பயிற்சி: 2. Technical Branch: 197/15T/SSC/W
வயது வரம்பு: 01.07.2015 தேதியின்படி 18 - 28க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1987 - 01.07.1997க்கும் இடையில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: Aeronautical Engineer (Electronics) AE (L) பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 4 வருட பி.இ., பி.டெக்., அல்லது இன்ஸ்ட்டியூட் ஆப் இன்ஜினியர்களால் நடத்தப்படும் அசோசியேட் மெம்பர்ஷிப் தேர்வு அல்லது ஏரோநாட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியாவால் நடத்தப்படும் தேர்வு அல்லது இன்ஸ்ட்டிடியூட் ஆப் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் இன்ஜினியர்களால் நடத்தப்படும் கிராஜூவேட் மெம்பர்ஷிப் தேர்வின் 'ஏ' மற்றும் 'பி' பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதிகள்: உயரம் - குறைந்தது 152 செ.மீட்டரும், உயரம் மற்றும் வயதிற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி 3. Ground Duty Branch: 197/15G/SSC/W
வயது வரம்பு: பட்டதாரிகளுக்கு 01.07.2015 தேதியின்படி 20 - 23க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: முதுகலை பட்டம், எல்எல்பி (5 வருடங்கள்) பெற்றவர்களுக்கு 20 - 25க்குள் இருக்க வேண்டும்.
பணி: Administration -Logistics
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் அல்லது 50 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம், அதற்கு இணையான டிப்ளமோ தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: ACCOUNTS
கல்வித்தகுதி: 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.காம் அல்லது 50 சதவிகித மதிப்பெண்களுடன் எம்.காம், ICWA,CA முடித்திருக்க வேண்டும்.
பணி: EDUCATION
கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் அல்லது 50 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உடற்தகுதிகள்: உயரம் குறைந்தது 152 செ.மீட்டரும்., உயரம் மற்றும் வயதிற்கு ஏற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: பொது அனுமதித் தேர்வு, உளவியல் தேர்வு, குழுத் தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.careerairforce.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
தேர்வு நடைபெறும் தேதி: 31.08.2014.
மேலும் முழுமையான விரிவான கல்வித்தகுதிகள், வயதுவரம்புகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.careerairforce.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment