Monday 4 August 2014

செய்ல் உருக்காலை நிறுவனத்தில் செவிலியர், மருத்துவ அதிகாரி பணி

இந்தியா முழுவதும் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான செய்ல் உருக்காலை நிறுவனத்தின் ரூர்கேலா கிளையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. நர்ஸிங் சிஸ்டர் டிரெய்னி - 21
02. நர்ஸிங் பிரதர் டிரெய்னி - 08
03. மெடிக்கல் கன்சல்டன்ட்/ஸ்பெஷலிஸ்டில் - 02
04. சீனியர் மெடிக்கல் ஆபிசர் - 09
விண்ணப்பக் கட்டணம்: நர்ஸிங் பிரிவிற்கு ரூ.250,  மெடிக்கல் எக்ஸிகியூடிவ் பணிக்கு ரூ.500. இதனை Power Jyoti Account No. 31955226331 at SBI, RSP Campus Branch, Rourkela” என்ற பெயருக்கு ரொக்கமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.sail.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இணையதள செலான் மூலம் கட்டணம் செலுத்திய பின் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தியான விண்ணப்பத்தின் விவரத்தை கணினிப் நகல் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.08.2014
மேலும் கல்வித்தகுதி, தேர்வுத் திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.sail.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment