Monday 11 August 2014

மும்பை NITIEல் பதிவாளர், துணை பதிவாளர் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் தேசிய தொழிலக பொறியியல் கழகத்தில் (NITIE) தற்கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பதிவாளர் மற்றும் துணை பதிவாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Registrar On Deputation
வயது வரம்பு: 55க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம் ரூ.7600 + மற்றும் பிற படிகள்
தகுதி: குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் கலை, அறிவியல், வணிகவியலில், பொறியியல், தொழில்நுட்பம், பொது நிர்வாகம் போன்ற ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் 
அல்லது Chartered Accountant, ICWA முடித்து குறைந்தபட்சம் 15 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Deputy Registrar (Temporary)
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15600 - 39100 + தர ஊதியம்  ரூ.6600 மற்றும் பிற சலுகைகள்.
தகுதி: குறைந்தபட்சம் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டங்களுடன் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை, போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nitie.edu, bandm@nitie.edu e-mailஐ தொடர்பு கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.08.2014

No comments:

Post a Comment