Friday 12 September 2014

கேந்திரிய வித்யாலயாவில் ஆசிரியரல்லாத 669 பணிகள்

புதுதில்லி கேந்திரிய வித்யாலயாவில் காலியாக உள்ள அதிகாரி மற்றும் ஆசிரியரல்லாத 669 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: முதல்வர்
காலியிடங்கள்: 145
வயது வரம்பு: 15.09.2014 தேதியின்படி 35 - 50க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.7,600.
தகுதி: 45 சதவீத தேர்ச்சியுடன் முதுநிலை பட்டம் மற்றும் பி.எட் முடித்து ரூ.10000 - 15,200 சம்பளத்தில் முதல்வராக பணிபுரிந்த அனுபவம் அல்லது ரூ.7,500 - 12000 சம்பளத்தில் துணை முதல்வர், உதவிக் கல்வி அலுவலராக பணி அல்லது ரூ.6,500 - 10,500 சம்பளத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் அல்லது விரிவுரையாளராக 8 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: டெக்னிக்கல் ஆபீசர்
காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,600.
வயது வரம்பு: 15.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சிவில் அல்லது ஆர்க்கிடெக்சர் அல்லது எலக்ட்ரிக்கல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.இ முடித்து சம்பந்தப்பட்ட துறையில் 6 வருடங்கள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: அசிஸ்டென்ட்
காலியிடங்கள்: 81
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
வயது வரம்பு: 15.09.2014 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அப்பர் டிவிசன் கிளார்க்காக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: அப்பர் டிவிசன் கிளார்க்
காலியிடங்கள்: 120
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 15.09.2014 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் லோயர் டிவிசன் கிளார்க்காக 3 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

பணி: லோயர் டிவிசன் கிளார்க்
காலியிடங்கள்: 284
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900.
வயது வரம்பு: 15.09.2014 தேதியின்படி 18 - 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: +2 தேர்ச்சியுடன் கணினியில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.


பணி: இந்தி மொழி பெயர்ப்பாளர்
காலியிடங்கள்: 07
வயது வரம்பு: 15.09.2014 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,200.
தகுதி: இந்தி அல்லது ஆங்கிலத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தியை பட்டப்படிப்பளவில் முக்கிய பாடமாக படித்திருக்க வேண்டும் அல்லது பட்டப்படிப்பில் ஆங்கிலம் அல்லது இந்தியை முக்கிய பாடமாக எடுத்துப் படித்திருப்பதோடு ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இந்தி அல்லது ஆங்கிலம் ஏதாவதொரு பாடத்தில் முதுகலை பட்டம் மற்றும் பட்டப்படிப்பு அளவில் இந்தி அல்லது ஆங்கிலத்தை முக்கிய பாடமாக படித்திருக்க வேண்டும்.
பணி: ஸ்டெனோகிராபர்: (நிலை - 2)
காலியிடங்கள்: 29
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
வயது வரம்பு: 15.09.2014 தேதியின்படி 27க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: மெட்ரிக்குலேசன் அல்லது அதற்கு சமமான தகுதி பெற்றிருப்பதுடன் இந்தி அல்லது ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறனும், நிமிடத்திற்கு 40 வார்த்தைகள் டைப் செய்யும் திறனும் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.
விண்ணப்பக் கட்டணம்: முதல்வர் மற்றும் டெக்னிக்கல் ஆபீசர் பணிகளுக்கு ரூ.1200. அசிஸ்டென்ட், அப்பர் டிவிசன் கிளார்க், லோயர் டிவிசன் கிளார்க், மொழி பெயர்ப்பாளர்
ஸ்டெனோகிராபர் (நிலை - 2) போன்ற பணிகளுக்கு ரூ.750. இதனை இந்தியன் வங்கி டெபிட்/கிரெடிட் கார்டு மூலம் செலுத்தலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்வர் பணிக்கு தில்லியில் மட்டும் எழுத்துத் தேர்வு நடத்தப்படும். அசிஸ்டென்ட், அப்பர் டிவிசன் கிளார்க், லோயர் டிவிசன் கிளார்க், இந்தி மொழிபெயர்ப்பாளர், ஸ்டெனோகிராபர் ஆகிய பணிகளுக்கு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எழுத்துத்தேர்வு நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.kvsangathan.nic.in அல்லது http://jobapply.in/kvs/ என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அசிஸ்டென்ட், அப்பர் டிவிசன் கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டும் ஆன்லைனில் விண்ணப்பித்து விட்டு பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப வேண்டும்.
பிரிண்ட் அவுட் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Post Box No: 3076,
Lodhi Road,
NEWDELHI 110 003.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.09.2014
ஆன்லைண் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 22.09.2014.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.kvsangathan.nic.in அல்லது http://jobapply.in/kvs/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment