Monday 22 September 2014

பொறியியல் மாணவர்களுக்கு இந்திய ராணுவத்தில் அதிகாரி பணி

இந்திய ராணுவத்தில் 25th Pre Final year University Entry Scheme என்ற பல்கலைக்கழக நுழைவு திட்டத்தின் கீழ் சேர்ந்து பயிற்சி பெற்று நிரந்தர பணியில் சேர திருமணமாகாத ஆண் இறுதியாண்டு பொறியியல் துறை மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: 25th Pre Final year University Entry Scheme.
காலியிடங்கள்: 60
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
சிவில் - 30
மெக்கானிக்கல் - 12
எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் - 06
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், சாட்டிலைட் கம்யூனிகேசன் - 06
ஆர்க்கிடெக்சர், பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி - 02
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் டெக்னாலஜி, எம்.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேசன் டெக்னாலஜி - 04.
தகுதி: விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2014 - 15 ஆம் கல்வியாண்டில் பி.இ மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை 3 மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 - 24க்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.1991 - 01.07.1997க்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: விண்ணப்பதாரர்கள் பயிலும் பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முதற் கட்ட நேர்காணல் நடத்தப்படும். ஆள் சேர்ப்பு நடத்தும் பிராந்திய ராணுவ தலைமையக அதிகாரிகள் இத்தேர்வை நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து எஸ்எஸ்பி தேர்வுக்கு பரிந்துரை செய்வார்கள். இந்த தேர்வு வருகின்ற நவம்பர் அல்லது டிசம்பரில் பெங்களூர், போபால், அலகாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறும்.
எஸ்எஸ்பி தேர்வின் முதல் நாளில் உளவியல் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் 2ம் கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். 2ம் கட்ட
தேர்வுகளிலும் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே மருத்துவ சோதனைகள் நடத்தப்பட்டு இறுதியில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் பி.இ இறுதியாண்டு முடித்த பின்னரே பயிற்சிக்கு அழைக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும்.

உயரம்: 157.5 செ.மீ., எடை: உயரத்திற்கு ஏற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.21,000 வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடித்தபின்பு மாதம் ரூ.15,600 - 39,100 + தர ஊதியம் ரூ.5,400 மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமுள்ள பொறியியல் துறை மாணவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2014.
மேலும் விண்ணப்பதார்களின் சந்தேகங்கள் மற்றும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment