Friday 19 September 2014

ஐடிஐ முடித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிள் பணி

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 80 குருப் ‘சி’ பணியிடங்களை நிரப்ப ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ஹெட் கான்ஸ்டபிள் (பயோனீர்)
காலியிடங்கள்: 23
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேசன், கார்பென்டர், பிளம்பர், எலக்ட்ரீஷியன், வெல்டர், பிளாக்ஸ்மித் ஆகிய ஏதாவதொரு தொழில் பிரிவில் ஐடிஐ அல்லது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஹெட் கான்ஸ்டபிள் (வெல்டர்)
காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ அல்லது 3 வருட வெல்டிங் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஹெட் கான்ஸ்டபிள் (பிளம்பர்)காலியிடங்கள்: 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பிங் பாடத்தில் ஐடிஐ அல்லது 3 வருட டிப்ளமோ மற்றும் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஹெட் கான்ஸ்டபிள் (டெக்னிக்கல்)
காலியிடங்கள்: 27
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: ஹெட் கான்ஸ்டபிள் (கார்பென்டர்/ மேசன்)
காலியிடங்கள்: 02
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர், மேசன் பிரிவில் ஐடிஐ அல்லது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: ஹெட் கான்ஸ்டபிள் (பிட்டர், பிளாக்ஸ்மித்)
காலியிடங்கள்: 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர், பிளாக்ஸ்மித் பிரவில் ஐடிஐ அல்லது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400.
பணி: கான்ஸ்டபிள் (கார்பென்டர்)
காலியிடங்கள்: 06
தகுதி: பம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பென்டர் பிரிவில் ஐடிஐ அல்லது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கான்ஸ்டபிள் (மேசன்)காலியிடங்கள்: 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் மேசன் பிரிவில் ஐடிஐ அல்லது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கான்ஸ்டபிள் (பிளம்பர்)காலியிடங்கள்: 06
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பிளம்பர் தொழிற்பிரிவில் ஐடிஐ அல்லது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கான்ஸ்டபிள் (வெல்டர்)காலியிடங்கள்: 03
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் பிரிவில் ஐடிஐ அல்லது 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மேற்கண்ட பணிகளுக்கும் மாதம் ரூ. ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2000.
வயது வரம்பு: 21.09.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும். எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு 5 வருடங்களும், ஒபிசியினருக்கு 3 வருடங்களும் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் பணிபுரிந்த காலத்தின் அடிப்படையில் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
உடற் தகுதிகள்: உயரம்: ஆண்கள் - 165 செ.மீட்டரும், (எஸ்டி - 160 செ.மீட்டரும்). பெண்கள் - 157 செ.மீட்டரும், மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) 76 - 81 செ.மீட்டரும், 20 வயதிற்கும் குறைவானவர்களுக்கு 2 செ.மீட்டரும் தளர்வு அளிக்கப்படும்.
ஓடுதல்: ஆண்கள் 1.6 கி.மீட்டர் தூரத்தை 6.5 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும். பெண்கள் 800 மீட்டர் தூரத்தை 4 நிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.
நீளம் தாண்டுதல்: ஆண்கள் 11 அடி நீளமும், பெண்கள் 9 அடி நீளமும் தாண்ட வேண்டும்.
உயரம் தாண்டுதல்: ஆண்கள் மூன்றரை அடி உயரமும், பெண்கள் 3 அடி உயரம் தாண்ட வேண்டும். இந்த போட்டிகளுக்கு தலா 3 வாய்ப்புகள் தரப்படும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.09.2014.
மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும், தேர்வு திட்டங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.bvf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment