Thursday 11 September 2014

இந்திய சுகாதார ஆராய்ச்சி கவுன்சிலில் மருந்தாளுநர் மற்றும் செவிலியர் பணி

புதுதில்லியில் இந்திய சுகாதார ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவ துறை சார்ந்த பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: F2-6/HM/29/2014
பணி: Medical Officer (Specialist)
காலியிடங்கள்: 04
தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் சிறப்பு மருத்துவப் பிரிவில் முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000
பணி: Medical Officer
காலியிடங்கள்: 04
தகுதி: எம்பிபிஎஸ் படிப்புடன் ஆயுர்வேதம், ஹோமியோபதி பிரிவில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: Assistant Medical Officer
காலியிடங்கள்: 04
தகுதி: BAMS/BHMS படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி: Social Medical Officer
காலியிடங்கள்: 04
தகுதி: Health Education-ல் ஏதாவதொரு டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Health Supervisor
காலியிடங்கள்: 04
தகுதி: துணை மருத்துவ பிரிவில் ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Pharmacist
காலியிடங்கள்: 01
தகுதி: டி.பார்ம் முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,000
பணி: Medical Worker
காலியிடங்கள்: 06
தகுதி: MSW அல்லது இணையான படிப்புடன் PMW பயிற்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது Public health பிரிவில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
பணி: Staff Nurse
காலியிடங்கள்: 08
தகுதி: Nursing பிரிவில் பி.எஸ் அல்லது Midwife training உடன் இணைந்த General nursing பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
பணி: Lab Technician/Assistant
காலியிடங்கள்: 01
தகுதி: Medical Laboratory Technology பிரிவில் டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.10,000


பணி: Clerk/Computer Assistant
காலியிடங்கள்: 04
தகுதி: பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.10,000
பணி காலம்: ஒரு வருடம். பணி திறனை அடிப்படையாகக் கொண்டு 3 வருடங்கள் வரே பணிக்காலம் நீட்டிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்முகத் தேர்விற்கு தேர்வு செய்யப்படுவர்களின் பெயர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. இதனை HRCI-ன் வங்கி கணக்கு எண்களில் சென்று சேருமாறு ஆன்லைன் அல்லது வங்கிகள் வழியாக செலுத்த வேண்டும்.
சென்ட்ரல் வங்கி கணக்கு எண்: 33966017892
ICICI வங்கி கணக்கு எண்: 003705500312
HDFC வங்கி கணக்கு எண்: 50200005722635
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் http://www.hrcigov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்து சான்றுகளின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட நகல்கள், விண்ணப்பக் கட்டணம் செலுத்தியதற்கான செல்லான் (ஸ்கேன் செய்யப்பட்டது) அனைத்து இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:15.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hrcigov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment