Wednesday 10 September 2014

கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் செயல்பட்டு வரும் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணியிடங்களை போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 01/2014
பணி: Technician/C (Boiler Operator)காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் முதல் வகுப்பு Boiler Attendant சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 19.09.2014 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வுகள் இரு நாட்கள் வரை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை: www.barc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Administrative Officer-III,
Bhabha Atomic Research Centre Facilities,
Kalpakkam-603102
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.09.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.barc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment