Friday 18 July 2014

+2 தகுதிக்கு முப்படைகளின் பயிற்சியுடன் பணி

தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Academy) மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி (Indian Naval Academy) பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் அதிகாரி அந்தஸ்தில் பணி செய்வதற்கான தேர்வை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வருகின்ற செப்டம்பர் 28ம் தேதி நடத்துகிறது. இதற்கு தகுதியான ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றந.
மொத்த காலியிடங்கள்: 375
காலியிடங்கள் விவரம்:
(ராணுவம் - 208
கப்பற்படை - 42
விமானப்படை - 70), இந்திய நேவல் அகாடமி (+2 Entry Scheme)-55
வயதுவரம்பு:02.01.1996க்கும் முன்போ அல்லது 01.01.1999க்கு பின்போ பிறந்திருக்கக்கூடாது. திருமணமாகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
கல்வித்தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10+2 (Cadet Entry Scheme) பிரிவிற்கு இயற்பியல், கணித பாடப்பிரிவில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். +2 எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு கட்டணம்: ரூ.100. SC,ST பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை. கட்டணத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து எஸ்பிஐ வங்கியில் பணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் படிவம் Part-I மற்றும் Part-II என்ற இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment