Sunday 27 July 2014

+2 முடித்தவர்களுக்கு முப்படைகளில் அதிகாரி பணி


தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் இந்திய கப்பற்படை அகாடமி பிரிவுகளில் சேர்ந்து பயிற்சி பெற்று பின்னர் ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படைகளில் அதிகாரி அந்தஸ்து பணிகளில் சேருவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்வு 28.9.2014 ஆம் தேதி நடத்த உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 375
காலியிடங்கள் விவரம்:
தேசிய பாதுகாப்பு அகாடமி - 320
ராணுவம் - 208
கப்பற்படை - 42
விமானப்படை - 70
இந்திய நேவல் அகாடமி - 55
வயது வரம்பு: 02.01.1996க்கு முன்போ அல்லது 01.01.1999க்கு பின்போ பிறந்திருக்கக் கூடாது. திருமணம் ஆகாத ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்வித் தகுதி: தேசிய பாதுகாப்பு அகாடமியின் ராணுவ பிரிவிற்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு அகாடமியின் விமானப்படை, கப்பற்படை பிரிவு மற்றும் கப்பற்படை அகாடமியின் 10 + 2 பிரிவிற்கு: இயற்பியல், கணிதம் கொண்ட பாடப்பிரிவில் +2 தேர்ச்சி. +2 தேர்வு எழுத இருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

உடற்தகுதிகள்: மார்பளவு: 81 செ.மீட்டரும், விரிவடையும் நிலையில் 5 செ.மீட்டரும் இருக்க வேண்டும். 15 நிமிடங்களில் 2.4 கி.மீ தூரம் ஓடி கடக்க வேண்டும். புஷ்அப் - 20, சிட்அப் - 20, சின்அப் - 8. 3-4 மீட்டர் வடம் ஏறுதல், ஸ்கிப்பிங் போன்றவற்றில் வெற்றி பெற வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.100. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலான் படிவத்தை பதிவிறக்கம் செய்து பாரத ஸ்டேட் வங்கியில் ரொக்கமாக செலுத்த வேண்டும் அல்லது நெட் பேங்கிங் முறையில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
பயிற்சி ஆரம்பமாகும் தேதி: தேசிய பாதுகாப்பு அகாடமியில் 134வது கோர்ஸ் மற்றும் கப்பல் படை அகாடமியின் 96வது +2 கோர்ஸ்கள் பயிற்சிகள் 02.07.2015 தொடங்க உள்ளது.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.upsc.gov.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment