Friday 25 July 2014

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலங்களில் தனியார் வேலை வாய்ப்புப் பணியமர்த்தல் பிரிவு பணியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

மாநிலம் முழுதும் உள்ள 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் நடத்தப்படும் தனியார் வேலை வாய்ப்பு பணியமர்த்தல் உதவிப் பிரிவுகளுக்கான பணியாளர் பதவிக்கு பின் வரும் தகுதியுடையோர்  சனிக்கிழமை மாலைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் (பொ) வி. வாசுதேவன் வெளியிட்ட தகவல்:
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் மாநிலத்தின் 32 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும்  32 ( MIS ) பணியாளர்கள், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தால், வெளி முகமை (Outsourcing) முறையில் நியமிக்கப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி : MBA(HR) / MSW(HR),  MA(Personnel Management)-(நேரிடையாக முழுநேர கல்வி பயின்றவர்கள் மட்டும்.)
வயது வரம்பு : 24 வயது முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள்.
வேலைவிவரம்:  வேலை நாடுநர்களுக்கு தனியார் துறையில் பணியமர்த்தம் செய்வது, தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுப்பது.
முன் அனுபவம்:  2 ஆண்டுகளுக்கு குறையாமல் மனிதவளத் துறையில் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். 
மாத ஊதியம்- ரூ.20,000 (தொகுப்பூதியம்)
மேற்காணும் தகுதியுடையோர் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை எண்.42, ஆலந்தூர் ரோடு, ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகம், கிண்டி, சென்னை. 600 032 -என்ற முகவரியில் அமைந்துள்ள அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு பதிவு அஞ்சல் மற்றும் ovemcl@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாக (26.7.2014)  சனிக்கிழமை  மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.com என்ற இணையதளத்துக்குள் சென்று பார்வையிடலாம்.

No comments:

Post a Comment