Thursday 10 July 2014

மத்திய கிடங்கு கழகத்தில் உதவியாளர் பணி

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான மத்திய கிடங்கு கழகத்தின் (Central Warehousing Corporation) சென்னை பிராந்திய அலுவலகத்தில் காலியாக உள்ள  Assistant Grade II பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Warehouse Assistant Grade II
காலியிடங்கள்: 22
வயதுவரம்பு: 14.07.2014 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறனுடன் கம்ப்யூட்டரில் அலுவலக பணிகளை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.8,900 - 24,320 + இதர படிகள்
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Central Warehousing Corporation என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுக்க வேண்டும். SC,ST,PH பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Regional Manager, Central Warehousing Corporation, Regional Office, No.4, North Avenue, Srinagar Colony, Saidapet, Chennai - 600015.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://cewacor.nic.in/Docs/rect_wa_II_cni_120614.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment