Saturday 19 July 2014

மகாராஷ்டிரா வன மேம்பாட்டு கழகத்தில் பல்வேறு பணி

மகாராஷ்டிரா வன மேம்பாட்டு கழகத்தில் (FDCM) நாக்பூர் மற்றும் சந்திராபூர் அலுவலகங்களில் நிரப்பப்பட உள்ள 185 கிளார்க், வன காவலர், ஒட்டுநர், காவலாளி மற்றும் உதவியாள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்களின் எண்ணிக்கை: 185
பணியிடங்கள் மற்றும் பணி வாரியான காலியிடங்கள் விவரம்:
I. Chandrapur Region :
1 கிளார்க் - 28
2 வன காவலர் - 77
3 டிரைவர் - 21
4 காவலாளி - 02
5 கையாள் - 02
II. Nagpur Region :
1 கிளார்க் - 15
2 டிரைவர் - 07
3 வன காவலர் - 23
4 லோயர் கிரேடு சுருக்ககழுத்தாளர் - 03
5 கையாள்(Peon) - 01
6 காவலாளி - 06

வயது வரம்பு: கிளார்க், லோயர் கிரேடு சுருக்ககழுத்தாளர், ஒட்டுநர், பியூன் மற்றும் காவலாளி பணியிடங்களுக்கு 18 - 33-க்குள் இருக்க வேண்டும். வன காவலர் பணியிடங்களுக்கு 18 - 25க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
1 கிளார்க் பணிக்கு +2 தேர்ச்சியுடன் மராத்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகளும், ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 40 வார்த்தைகளும் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
2. ஒட்டுநர் பணிக்கு எஸ்எஸ்சி தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3 வன பாதுகாவலர் பணிக்கு HSSC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
4. ஸ்டெனோ பணிக்கு: பட்டம் மற்றும் தட்டச்சு திறன் பெற்றிருக்க வேண்டும்.
5 Peon மற்றும் Watchman பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உடற்திறன் தேர்வு மூலம்  வாட்ச்மேன் மற்றும் வன காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்:
1. கிளார்க் மற்றும் ஒட்டுநர் ரூ.5200 - 20,200 + தர ஊதியம் ரூ.1900.
2. வன காவலர் பணிக்கு மாதம் ரூ 5200. 20,200 + தர ஊதியம் ரூ.1800.
3. லோயர் கிரேடு சுருக்ககழுத்தாளர் பணிக்கு மாதம் ரூ. 9300. 34,800 + தர ஊதியம் ரூ.4300.
4. Peon & Watchman பணிக்கு மாதம் ரூ.4440. 7440 + தர ஊதியம் ரூ.1300.
விண்ணப்ப கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. இட ஒதுக்கீடு பிரிவினருக்கு ரூ.250. இதனை டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.fdcm.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
Chandrapur Region :
Regional Manager, FDCM Limited,
Depot Division, Forest Development Building,
Ballarshah – 442701 District-Chandrapur (Maharashtra)

Nagpur Region:
Regional Manager, Gorewada Project,
Nagpur, Ne Tollgate No.11, Makardhokada,
Kotal Road, Nagpur-440013
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 22.07.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.fdcm.nic.in/Advt.%20FDCM%20July%202014.pdf என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment