Sunday 6 July 2014

எல்லை பாதுகாப்பு படையில் பணி

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 496 ஏஎஸ்ஐ (ஆர்எம்), ஹெட்கான்ஸ்டபிள் (ஆர்ஒ) மற்றும் ஹெட்கான்ஸ்டபிள் (பிட்டர்) பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அசிஸ்டென்ட் சப்-இன்ஸ்பெக்டர் (ஆர்.எம்)
காலியிடங்கள்: 68
கல்வித்தகுதி: ரேடியோ மற்றும் டி.வி., டெக்னாலஜி அல்லது எலக்ட்ரானிக்ஸ் அல்லது டெலிகம்யூனிகேசன் அல்லது கம்ப்யூட்டர் அல்லது எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 3 வருட டிப்ளமோ அல்லது இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஹெட்கான்ஸ்டபிள் (ஆர்.ஒ)
காலியிடங்கள்: 417
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோ மற்றும் டி.வி, எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 2 வருட ஐடிஐ அல்லது இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஹெட்கான்ஸ்டபிள் (பிட்டர்)
காலியிடங்கள்: 11
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இன்ஜின் பிட்டர், டீசல் மெக்கானிக், ஆட்டோமொபைல், மோட்டார் மெக்கானிக் பிரிவில் 2 வருட ஐடிஐ அல்லது இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 07.07.2014 தேதியின்படி பொதுப்பிரிவினருக்கு 18 - 25க்குள்ளும், ஓபிசியினருக்கு 18- 28க்குள்ளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 18-30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ தகுதியின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை DIGCOMMANDANT என்ற பெயருக்கு பெங்களூரில் மாற்றத்தக்க வகையில் டிடி.யாக அல்லது போஸ்டல் ஆர்டராக செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
THE DIGCOMMANDANT,
BFS STS YELAHANKA,
BANGALORE (KARNATAKA),
PIN: 560 004.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 07.07.2014.
மேலும் மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை போன் முழுமையான விவரங்கள் அறிய www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment