Tuesday 15 July 2014

மின்பகிர்மான கழகத்தில் சூப்பர்வைசர் பணி

இந்திய அரசுக்கு சொந்தமான இந்திய மின் பகிர்மான கழகத்தில் (Power Grid Corporation of India Limited) இரு வருட ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள Field Supervisor பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Field Supervisor - Civil
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 21.07.2014 தேதியின்படி 29-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி:  Field Supervisor - Electrical
காலியிடங்கள்: 06
வயதுவரம்பு: 29க்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடம்: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும்.
சம்பளம்: முதல் வருடம் மாதம் ரூ.23,000 வீதமும், இரண்டாம் வருடம் ரூ.25,000 வீதம் வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. SC,ST,PWD பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. கட்டணத்தை Power GRID CORPORATION OF INDIA LTD என்ற பெயரில் பாட்னாவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.powergridindia.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.07.2014
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:  TheAdvertiser (JCp,ER1), Post Box No: 9248, Krishna Nagar Head Post Officer, Delhi-110051.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.powergridindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments:

Post a Comment